நேற்றைய தினம் (03) வடக்கு மாகாணத்தின் உள் நிலப்பகுதிகள் பலவற்றில் நாளின் அதிகூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸ்க்கு மேலாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கீரிசுட்டானில் 40.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பிற்பகல் 1.38 மணிக்கு பதிவாகியுள்ளது.
அதேவேளை சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைத்துள்ளது.
எதிர்வரும் 9ம் திகதி செங்கலடி,ஏறாவூர் பிரதேசங்களுக்கு மேலாகவும், 10ம் திகதி தாண்டிக்குளம், புளியங்குளம், வாகரை பகுதிகளுக்கு மேலாகவும், 11ம் திகதி கிண்ணியா, ஈரற்பெரியகுளம் பகுதிகளுக்கு மேலாகவும், 12ம் திகதி திரியாய், வஞ்சையன்குளம், புதுக்கமம், ஓமந்தை, மருதன்குளம், இரணைமடு, அம்பகாமம் பகுதிகளுக்கு மேலாகவும், 13 ம் திகதி அக்கராயன், முறிகண்டி, கெருடாமடு,குமுழமுனை, தண்ணீருற்று, பகுதிகளுக்கு மேலாகவும் 14ம் திகதி மண்டைதீவு, நயினாதீவு, புங்குடுதீவு, மணற்காடு, மருதங்கேணி,உடுத்துறை பகுதிகளுக்கு மேலாகவும் 15ம் திகதி பருத்தித்துறை, நெடுந்தீவுக்கு மேலாகவும் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இக்காலப்பகுதிகளில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பநிலை மிக உயர்வாக காணப்படும். அதேவேளை இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட காலங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வெப்பநிலை மிக உயர்வாக இருக்கும் என்பதனால் போதுமான ஏற்பாடுகளுடன் செயற்படுவது சிறந்தது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். (ஏ)
Leave a Reply