Author: admin
-
யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக நிா்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (04) நடைபெற்றது. இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. அந்நிலையில் இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் இன்றைய தினம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
-
வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்!
நேற்றைய தினம் (03) வடக்கு மாகாணத்தின் உள் நிலப்பகுதிகள் பலவற்றில் நாளின் அதிகூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸ்க்கு மேலாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கீரிசுட்டானில் 40.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பிற்பகல் 1.38 மணிக்கு பதிவாகியுள்ளது. அதேவேளை சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைத்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி செங்கலடி,ஏறாவூர் பிரதேசங்களுக்கு மேலாகவும், 10ம் திகதி தாண்டிக்குளம், புளியங்குளம், வாகரை பகுதிகளுக்கு மேலாகவும், 11ம் திகதி கிண்ணியா, ஈரற்பெரியகுளம் பகுதிகளுக்கு மேலாகவும், 12ம் திகதி திரியாய், வஞ்சையன்குளம்,…